கேரள மாநில மசூதியில் பெண்களுக்கு அனுமதி கோரும் முஸ்லீம் பெண்கள் - Agnipuratchi

கேரள மாநில மசூதியில் பெண்களுக்கு அனுமதி கோரும் முஸ்லீம் பெண்கள்

Share This

சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் கூறியதாவது கேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது என்றும், தீண்டாமை கடைப்பிடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அந்த வகையில், சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வரவேற்க தக்கது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages