சிபிஐ மோதல் விவகாரம்-காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம் - Agnipuratchi

சிபிஐ மோதல் விவகாரம்-காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்

Share This

மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களை மத்திய அரசு, கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரிக்க முற்பட்டதாலே அலோக் வர்மாவை அரசு நீக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தினை அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர்கள் போராட்டங்களை நடத்துவார்கள் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages