18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, 20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். மேலும், தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு ஒரு அனுபவம் என டிடிவி தினகரன் கூறியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், அவர் கூறியது என்ன அனுபவம் என தெரியவில்லை. அடிப்படை உறுப்பினரே இல்லாத தினகரனின் கருத்து எப்படி கட்சிக்கு பொருந்தும் என்று பதிலளித்தார்.
Home
அண்மை செய்திகள்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment