'மீ டூ' விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் - Agnipuratchi

'மீ டூ' விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

Share This

இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் 'மீ டூ' இயக்கத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர், இயக்குனர் அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது. இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில் அவர், "சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்கவே விரும்புகிறேன். 'மீ டூ' விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும், பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன" என்று கூறியுள்ளார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages