தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக் கோரிய வழக்கில், 2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாதென நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன் திங்களன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அனைத்து மாநில செய்திதாள்களிலும் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி மற்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடுமென நீதிபதி எச்சரித்து விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Home
அண்மை செய்திகள்
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை-ஆணையை பின்பற்றாத பள்ளிகளின் உரிமம் ரத்து
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை-ஆணையை பின்பற்றாத பள்ளிகளின் உரிமம் ரத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment