குட்கா விவகாரம்- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு - Agnipuratchi

குட்கா விவகாரம்- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

Share This

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய தமிழகத்தை சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மாதவராவ் உள்பட, உணவு பாதுகாப்புத்துறை சிவகுமாரும் கைது⛓ செய்யப்பட்டனர். இந்தநிலையில் சிவகுமார் கடந்த வாரம் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
அந்த மனுவில் சிபிஐ அதிகாரிகள் குறிப்பிடுவது போல், குட்கா ஆலைக்கு நான் உரிமம் வழங்கவில்லை. குட்கா வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தான் சிபிஐ அதிகாரிகள் என்னை கைது⛓ செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நீதிபதி திருநீலபிரசாத், சிவகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages