எரிபொருள் விலையில் அரசு தலையிடாது-மத்திய அமைச்சர் அறிக்கை - Agnipuratchi

எரிபொருள் விலையில் அரசு தலையிடாது-மத்திய அமைச்சர் அறிக்கை

Share This

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, அண்மையில் லிட்டருக்கு தலா ரூ.2.50 ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் தற்போது மீண்டும் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு மீண்டும் இதே போன்ற விலைக் குறைப்பு நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ளுமா⁉ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது, பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது. பெட்ரோல், டீசல் விலையினை மத்திய அரசு குறைத்த போதிலும், டெல்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் விலையைக் குறைக்கவில்லை. அது ஏன்⁉ என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages