கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளையாட்டு சங்கங்களின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, அரங்கில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து விழாவில், தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வென்ற நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பரிசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் உயர்வு-எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment