தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த பொதுநல வழக்கு-தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் - Agnipuratchi

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த பொதுநல வழக்கு-தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

Share This

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, திமுக சார்பில் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையினை அடுத்து தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு தமிழக தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages