சென்னை அருகே மாதவரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் கஜலட்சுமி தம்பதிகளின் இரட்டை குழந்தைகளான தக்ஷன் மற்றும் தீக்ஷாவுக்கு கடந்த ஒருவாரம் மேலாக கடும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் காய்ச்சல் தொடர்ந்ததால், அவர்களை பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனையடுத்து அந்த இரு குழந்தைகளுக்குமே டெங்கு காய்ச்சல் என்று தெரியவந்துள்ளது. மருத்துவர்கள், குழந்தைகளுக்கு தனி அறை ஒதுக்கி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மரணம் மருத்துவமனை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சேலம், நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு -சென்னையில் இரட்டை குழந்தைகள் பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment