கேரளத்தில் மீண்டும் மழை -மக்கள் அச்சம் - Agnipuratchi

கேரளத்தில் மீண்டும் மழை -மக்கள் அச்சம்

Share This

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையில் ஏற்பட்ட சேதங்களில் இருந்து இன்னும் அம்மாநில மக்கள் மீண்டுவரவில்லை. அதற்குள் தற்போது பெய்ய தொடங்கியுள்ள கனமழை கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இடுக்கி, திருச்சூர், மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் அரசு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடலோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண முகாம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages