சபரிமலை விவகாரம்-தந்திரி குடும்ப வாரிசு ராகுல் ஈஸ்வர் மீண்டும் கைது - Agnipuratchi

சபரிமலை விவகாரம்-தந்திரி குடும்ப வாரிசு ராகுல் ஈஸ்வர் மீண்டும் கைது

Share This

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்ததிலிருந்து கேரளாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ராகுல் ஈஸ்வர், ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த அக்டோபர் 24-ம் தேதி அவர் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "எங்கள் எதிர்ப்பையும் மீறி, குறிப்பிட்ட வயது பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து இருந்தால், கோவிலை மூட வைக்க ரகசிய திட்டம் தீட்டி இருந்தோம். அதன்படி, கோவில் வளாகத்தில் சுமார் 20 பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை கீறி, ரத்தம் சிந்தி, கோவிலை மூடுமாறு செய்ய தயாராக இருந்தனர். ஆனால் எங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும், "வருடாந்திர சீசனுக்காக 3 மாத காலம் அய்யப்பன் கோவில் நடை திறந்து இருக்கும். அப்போது, குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் நுழைய அனுமதித்தால், மேற்கண்ட திட்டத்தை பக்தர்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசியதால், தந்திரி குடும்ப வாரிசான ராகுல் ஈஸ்வரை கொச்சி போலீசார் கைது செய்து, ஐ.டி.சி பிரிவு 153 -ன் படி வழக்க்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages