தமிழக அணியின் கேப்டனாக இளம் வீரர் இந்திரஜித் நியமனம் - Agnipuratchi

தமிழக அணியின் கேப்டனாக இளம் வீரர் இந்திரஜித் நியமனம்

Share This

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் ரஞ்சி தொடர் விரைவில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடர் ஆட்டத்திற்கான தமிழக அணியின் கேப்டனாக 24வயது இளம் வீரரான பாபா இந்திரஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ரஞ்சி தொடருக்கான தமிழக அணி விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக அணியை கடந்த ஒரு வருடமாக வழிநடத்தி வந்த அபினவ் முகுந்த் தலைமையில் தொடந்து படு தோல்விகளை தமிழக அணி சந்தித்து வருவதால் தமிழ்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages