பட்டாசு விற்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை-உச்சநீதிமன்றம் - Agnipuratchi

பட்டாசு விற்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை-உச்சநீதிமன்றம்

Share This

காற்றில் மாசு கலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது, எனவே, நாடு முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க முடியாது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இருப்பினும் பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு, அதிக சப்தம் உண்டாக்கி பாதிப்பளிக்கும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது என்றும், தீபாவளி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் இரவு 11.45 முதல் 12. 45 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages