பா.ஜ.க.,வில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் - Agnipuratchi

பா.ஜ.க.,வில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்

Share This

கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்குப் பின், முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி ராமன் நாயர் உள்ளிட்ட 5 பேர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது குறித்து மாதவன் நாயர் கூறியதாவது, சமீப காலமாகவே பாரதிய ஜனதா கட்சிக்கு பணியாற்றி வந்த நான் தற்போது முறைப்படி அமித்ஷா முன்னிலையில், இக்கட்சியில் இணைந்துள்ளேன். இந்தியாவின் மேம்பாடு குறித்த பிரதமர் மோடியின் எண்ணங்கள் என்னை அதிகளவில் ஈர்த்ததால் நான் பா.ஜ.க.வில் இணைத்துள்ளேன் என்று தெரிவித்தார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages