விடுதலை செய்யப்பட்டார் நக்கீரன் கோபால் - Agnipuratchi

விடுதலை செய்யப்பட்டார் நக்கீரன் கோபால்

Share This

சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இருந்து வெளியான நக்கீரன் கோபால் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம். அந்த செய்திக்காக என்னை கைது செய்ததாக நீதிமன்றத்தில் சொன்னார்கள். நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றது அதனால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என கூறினார். மேலும் பேசிய அவர் "வைகோவை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு ஆதரவு அளித்த எதிர்கட்சி தலைவருக்கும் நன்றி நீதிமன்றத்தை வணங்குகிறோம்" என்றும் தெரிவித்தார். முன்னதாக அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையில் கவர்னருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த நீதிபதி, அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages