மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு - Agnipuratchi

மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

Share This

சேலத்தில் மாணவ, மாணவிகளுடன் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி-பதில் முழுவதையும் இதில் காணலாம். Watch:- https://youtu.be/cJith6iendg

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை தான் முதலில் கொண்டு வருவோம். அதன் மூலம் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம். சினிமாவில் தான் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் மற்றும் ரவுடியிசம் செய்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். நாங்கள் கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வருவோம். அறிவுசார்ந்த கல்வி, திறன் சார்ந்த கல்வி, தொழிற்சார்ந்த கல்வி முறைகளை பற்றி புரியும் வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வருவோம். மேலும் கல்வி சேவையை இலவசமாக கொடுப்போம்.

இதுதவிர, ‘நீட்‘ தேர்வால் தமிழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு தேவையில்லை என்று நாங்கள் மட்டும் போராடுவதை போன்று ஒட்டுமொத்த மாணவர்களாகிய நீங்களும் போராடி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை உரிமை சட்டத்தை இயற்ற வேண்டும்.

அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பதை விட அடுத்த தலைமுறைகளை பற்றி சிந்திக்கும் நல்ல தலைவர்களை மாணவர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ராமேசுவரம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு மறுத்தால் நாங்களே மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம். தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages