ஆசிஃப் பிரியாணி ஓட்டல் தரப்பு செய்தியாளர் சந்திப்பு வழங்கப்பட்ட பிரியாணியில் புழு - Agnipuratchi

ஆசிஃப் பிரியாணி ஓட்டல் தரப்பு செய்தியாளர் சந்திப்பு வழங்கப்பட்ட பிரியாணியில் புழு

Share This

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்று கூறி கடந்த 3 ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆசிஃப் பிரியாணி தயாரிப்பு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. அதில் உணவுப்பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகைப்போக்கிகள் அமைத்தல், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தூய்மை, உள்ளிட்ட 8 குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, சீல் நீக்கப்பட்டுவிட்டதாக உரிமையாளர் ஆசிஃப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததை அடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதைப் படம் பிடித்தனர். இதையடுத்து, உரிமையாளர் ஆசிஃப், அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் விளக்கமளித்த ஆசிஃப் பிரியாணி நிர்வாகி பாசித், தங்களுக்கு எதிராக வேண்டுமென்றே யாரோ சதி செய்வது போல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages