வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் தடையை மீறி தமிழகத்தில் இருந்து ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்துக்கு தாது மணலை கொண்டு சென்று தாதுக்கள் பிரித்தெடுத்துள்ளதாகவும், பிரித்தெடுத்த தாதுக்கள் விசாகபட்டினம் துறைமுகம் வழியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்நிறுவனம் இலங்கையிலும் இந்த ஏற்றுமதியினை செய்து வருவதாக ஐ.டி. தெரிவித்துள்ளது. மேலும் இந்த அதிரடி சோதனையில் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஆவணங்கள், ரூ.7 கோடி பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, வி.வி.மினரல்சின் வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தடையை மீறி தாது மணலை ஏற்றுமதி செய்த வி.வி.மினரல்ஸ் நிறுவனம்-வருமானவரித்துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment