முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், அதிமுக எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் சமீபத்தில் தனது அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரையும் காவல்துறை உயர் அதிகாரியையும் அவதூறாக பேசி, அந்த விவகாரம் தொடர்பாக கைதான⛓ அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கருணாஸ்க்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நெல்லையில் தமிழ்நாடு தேவர் பேரவை நிர்வாகிகள் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸை தேடி நெல்லை போலீஸ் சென்னை வந்துள்ளது. கருணாஸை தேடி சென்னையில் உள்ள வீட்டுக்கு நெல்லை போலீஸ் நேற்றிரவு சென்ற நிலையில் அவருக்கு நெஞ்சு வலி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கருணாஸு எம்.எல்.ஏ வுக்கு நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment