உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு இல்லை-கேரள முதல்வர் - Agnipuratchi

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு இல்லை-கேரள முதல்வர்

Share This

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்ய போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு முதலில் கூறியது. பின்னர், மனு தாக்கல் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் நேற்று போராட்டங்களும், பேரணியும் நடந்ததையடுத்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "சபரிமலை தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாது. சபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு செய்து தரப்படும். கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சபரிமலை செல்ல விரும்பும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages