திருவாரூர் மாவட்டம் விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவின் போது ஆலயத்திற்கு 12 ஐம்பொன் சிலைகள் கொடுக்கப்பட்டதாகவும், அவற்றில் 8 சிலைகள் மட்டுமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் உண்மைத்தன்மை குறித்து சிலைகடத்தல் தடுப்பு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையிலான போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு 2 நாட்கள் நடைபெறும் என்றும், சிலைகளின் உயரம், எடை, அகலம், சிலைகளின் வடிவமைப்பு ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த கருங்கல் வினாயகர் சிலை, நந்தி சிலை, கருங்கல் தூண்கள் காணமால் போனதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இதுகுறித்தும் ஆய்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திடீர் ஆய்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment