கோவை மாவட்டம் தடாகம் அடுத்த தாளியூர் கிராமத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானை விவசாய சங்க நிர்வாகி நடராஜன் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றது. அங்கு வீட்டின் முன்பு வராண்டாவில் இருந்த அரிசி மூட்டைகளை தள்ளி அதில் இருந்த அரிசி மற்றும் யூரியாவை தின்றது. யானை வீட்டிற்குள் நுழைந்த போது வீட்டில் குழந்தைகள் பெண்கள் இருந்ததால் அச்சத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் அந்த யானையை திருப்பி போக சொல்லியும் குரல் எழுப்பினர். இருப்பினும் கொஞ்ச நேரம் அரிசியை சாப்பிட்ட யானை பின்னர் அங்கிருந்து சென்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த யானையால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருந்தாலும் வீடுகளில் யானை நுழைவதால் அச்சம் ஏற்படுகிறது. இது போன்று சில யானைகள் தொடர்ச்சியாக வீட்டிற்குள் புகுவதால் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்" என்று தங்களது கோரிக்கையினை முன்வைத்தார்கள்.
📹http://v.duta.us/R4VtTQAA
கோவை அருகே வீட்டுக்குள் புகுந்த யானை-வீடியோ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment