நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல்-திமுக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் - Agnipuratchi

நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல்-திமுக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Share This

தமிழக நெடுஞ்சாலைத் துறை டெண்டர்கள் முதல்வர் எடப்பாடியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளாக செயல்பட்டவர்களுக்கு ரூ.4833.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, விசாரணையில் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages