அடுத்த 48 மணி நேரத்திற்கு, சர்வர்'களில், பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சர்வதேச அளவில், இன்டர்நெட்' பயன்படுத்துவது, சிக்கலானதாக இருக்கும் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் குல்ஷன் ராய் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மீடியாக்களில் கூறப்பட்டது போல் இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது" என்று தெரிவித்துள்ளார். மேலும், துரதிஷ்டவசமாக இந்த தகவல் தலைப்பு செய்தி அளவிற்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணம் மிகக் குறைந்த அளவிலான இணையதள பயன்பாட்டாளர்களுக்கே பாதிப்பு ஏற்படும். 99 சதவீதத்திற்கு அதிகமான பயன்பாட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று இணையதளத்தை நிர்வகிக்கும் ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் சைன்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 💻இணையதள முடக்கம் ஏற்படாது-சைபர் பாதுகாப்பு அதிகாரிகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment