சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 2 சிலைகளையும் ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் 8 அடி உயரத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் 55 வயதுத் தோற்றத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலலிதாவின் சிலையினை அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டபின்னர், ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆர்.சிலை இன்னும் 5 தினங்களில் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment