தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை -சென்னை வானிலை மையம் - Agnipuratchi

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை -சென்னை வானிலை மையம்

Share This

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து அண்மையில் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாவது, வடதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும். தென்தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றார். காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages