அத்திகடவு–அவினாசி திட்டம் ரூ.1500 கோடி டெண்டர் அறிவிப்பு - Agnipuratchi

அத்திகடவு–அவினாசி திட்டம் ரூ.1500 கோடி டெண்டர் அறிவிப்பு

Share This

அத்திகடவு–அவினாசி திட்டத்துக்கு ரூ.1500 கோடி டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவினாசி சுற்றியுள்ள பகுதிகளை வளப்படுத்த பவாணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை, அவினாசியிலிருந்து, அத்திகடவு வரை உள்ள பகுதிகளுக்கு வழங்கவே இத்திட்டம். மேலும், பாசன திட்டம் என்பதை தாண்டி, கால்வாய்கள் மூலம் குளம் ,குட்டை, கண்மாய்களை இந்த உபரி நீர் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ரூ.1,500 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிமுக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,இத்திட்டம் கொங்கு மண்டலத்தின் 40 வருட கோரிக்கை என்றும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது அதிமுக அரசின் மகத்தான சாதனை என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages