வேளச்சேரி, பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்-கோரிக்கை பேச்சுவார்த்தை தோல்வி - Agnipuratchi

வேளச்சேரி, பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்-கோரிக்கை பேச்சுவார்த்தை தோல்வி

Share This

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் விலை தரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர், மற்றும் ரயில்வே தலைமை பொறியாளர் கலந்து கொண்டனர். சதுர அடிக்கு 3 ஆயிரத்து 743 ரூபாய் தருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சந்தை மதிப்பீட்டின் படி, சதுர அடி, 6 ஆயிரத்து 500ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், நீதிமன்ற உத்தரவின் படி சந்தை மதிப்பீட்டினை தருமாறும் 37 குடும்பங்களைச் சேர்ந்தோர் கோரியுள்ளனர். ஆனால், இது குறித்து நடந்த 3வது முறையாக நடந்த இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவுற்றது. இப்பிரச்சனையின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக வேளச்சேரி - பரங்கி மலை பறக்கும் ரயில் திட்டமும், ஆதம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை 500மீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages