ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் விஜயபாஸ்கர் - Agnipuratchi

ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் விஜயபாஸ்கர்

Share This

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஈ மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, குழுக்கள் போடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்புக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்களில் பிளீச்சிங் பவுடர் பொட்டலங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், அரை கிலோ பொட்டலங்களை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages