கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலின் தாக்கத்தினால் 1 லட்சத்து 13 ஆயிரத்து 566 மின் கம்பங்கள், ஆயிரத்து 82 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளது. அதனை, இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, சேதமடைந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் 24 ஆயிரத்து 941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதார பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புயலின் மறுசீராய்வு பணியில் உயிரிழந்தோருக்கு நிதியுதவி-தமிழக முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment