தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு-3 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விளக்கம் - Agnipuratchi

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு-3 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விளக்கம்

Share This

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியல் சட்டம் பிரிவு 161-ன் படி 3 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. மேலும் 3 பேரை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்று தமக்கு திருப்தி ஏற்பட்டதால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். கும்பல் நடத்திய வன்முறையால் தான் 3 மாணவிகள் இறந்ததாக நீதிமன்றமும் தீர்பளித்தது. 3 பேரை விடுவிக்க தமிழக அரசு 3 முறை கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது. 3 முறை பரிந்துரைத்த போதும் ஆளுநர் திருப்தி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் 13 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால் தற்போது விடுதலை செய்ய ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages