சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 59 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய புகழேந்தியை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து மத்திய அரசு கடந்த 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டிடத்தில் பதவியேற்பு நடைபெற்றது. கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்ற புகழேந்திக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புகழேந்தி பதவியேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment