சிலைகடத்தல் குறித்த 50 வழக்கின் எப்.ஐ.ஆர். இன்னும் கொடுக்கவில்லை -ஐஜி பொன்.மாணிக்கவேல் - Agnipuratchi

சிலைகடத்தல் குறித்த 50 வழக்கின் எப்.ஐ.ஆர். இன்னும் கொடுக்கவில்லை -ஐஜி பொன்.மாணிக்கவேல்

Share This

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, சிலைக் கடத்தல் தொடர்பாக பதியப்பட்டுள்ள 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் இன்னும் கொடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, 50 முதல் தகவல் அறிக்கைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மறுபக்கம், சிலைக்கடத்தல் வழக்கில், தொழில் அதிபர்கள் ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோர் முன் ஜாமின் மனு விசாரணையின் போது, இருவரும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages