வடகிழக்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு அதிகமாக இருக்கும்-வானிலை மையம் - Agnipuratchi

வடகிழக்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு அதிகமாக இருக்கும்-வானிலை மையம்

Share This

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் தொடங்கியுள்ளது, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் இதர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும், வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காற்றழுத்த தாழ்வு நிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் குறிப்பிடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages