சென்னை மாமல்லபுரம்-தனியார் பேருந்து மீது மோதிய கார் விபத்தில் 5 பேர் பலி - Agnipuratchi

சென்னை மாமல்லபுரம்-தனியார் பேருந்து மீது மோதிய கார் விபத்தில் 5 பேர் பலி

Share This

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார், கடலூரைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு கடலூர் திரும்பி கொண்டிருந்த தனியார் பேருந்தின் அடியில் சிக்கி உருத்தெரியாமல் நொறுங்கியது. காரில் பயணித்த 5 பேர் உடல் நசுக்கி பலியாகி உள்ளனர், இதில் இருவரின் உடல் அடையாளம் தெரிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினருடன் வந்த காவல்துறையினர் காருக்குள் சிக்கியிருந்த உடல்களை போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். விபத்துக்குள்ளான புதுசேரியில் இருந்து வந்த கார் தமக்கு முன்னால் சென்ற காரினை முந்தி சென்ற முயன்றதில் தான், எதிரே வந்த பேருந்து மீது மோதியது என்று பேருந்தில் இருந்தோர் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages