முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் நிதி ரூ.5 லட்சமாக உயர்வு - Agnipuratchi

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் நிதி ரூ.5 லட்சமாக உயர்வு

Share This

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages