பூவிருந்தவல்லி அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - Agnipuratchi

பூவிருந்தவல்லி அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

Share This

சென்னை பூவிருந்தவல்லி அருகே குடோனில் பதுக்கப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் குடோனில் பதுக்கப்பட்டிருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் அடையாறில் பிடிபட்ட புருஷோத்தமன் என்பவர் அளித்த தகவலின்படி அடையாறு காவல் துணை ஆணையர் ஷேசாய்சிங் தலைமையிலான போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages