டெல்லியில் காற்று மாசு உச்சகட்ட அளவை எட்டியிருப்பதால் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் இது மேலும் மோசமடைந்து காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது. இதனையடுத்து, நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி விட படுகின்றனர். எனினும், காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு- கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment