கஜா புயல் திண்டுக்கல்லில் மையம்-புயலில் பலியானோருக்கு தமிழக அரசு நிதியுதவி - Agnipuratchi

கஜா புயல் திண்டுக்கல்லில் மையம்-புயலில் பலியானோருக்கு தமிழக அரசு நிதியுதவி

Share This

கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் 80 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், கரூர், தேனி மற்றும் திருச்சியில் கனமழை அல்லது மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி பகுதிகளில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு புயலின் தாக்கத்தால் மின் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, சுவர்கள் இடிந்து விழுந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு ரூ. 10 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages