பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்கள்- 7 வார சம்பளத்தை அரசே வழங்குமென அறிவிப்பு - Agnipuratchi

பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்கள்- 7 வார சம்பளத்தை அரசே வழங்குமென அறிவிப்பு

Share This

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பை கடந்த ஆண்டு 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. விடுமுறை நீட்டிப்பை பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் பிரசவ விடுப்பு எடுக்கும் 26 வார காலத்தில் 7 வாரங்களுக்கான சம்பளத்தை வேலைவழங்கும் நிறுவனங்களுக்கு அரசே வழங்கும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார். மேலும், இதனால் கர்ப்பிணி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages