இலங்கை அரசியலின் குழப்பம்-சுதந்திர கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே - Agnipuratchi

இலங்கை அரசியலின் குழப்பம்-சுதந்திர கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே

Share This

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதில் தொடங்கிய இலங்கை அரசியலின் குழப்பம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திடீர் திருப்பமாக, மஹிந்த ராஜபக்சே நேற்று கட்சி மாறினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். ராஜபக்சேவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 50 முன்னாள் எம்.பி.களும் கட்சி மாறியுள்ளனர். இதனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளை விட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது செல்வாக்கை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages