கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த கிளிட்டசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள், கேரளா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் என 13 பேர் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். கர்நாடகா மாநிலம் மங்களாபுரம் பகுதியில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடந்த 9ம் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென இன்ஜின் பழுதாகியுள்ளது. பழுதினை சரிசெய்ய முடியாத மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்று கடலோர காவல் படையின் விமானம் மூலம் கண்காணித்தபோது லட்சத்தீவு அருகே 140 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் தத்தளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படகில் கோளாறு காரணமாக லட்சத்தீவில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment