தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் - Agnipuratchi

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர்

Share This

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கிவிரட்டியடித்தாக புகார் எழுந்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 200 மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்களில் சில மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பியனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages