பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி துவக்கம் - Agnipuratchi

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி துவக்கம்

Share This

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த பணிகளுக்காக ரூ.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத மரங்கள் மற்றும் கருவேலங்கச்செடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தைகளுக்கு விளையாட தனி இடங்கள், பறவைகளை பார்த்து மகிழ கோபுரங்கள் என பல்வேறு வசதிகளும் செய்து தரப்படவுள்ளது என்று வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நன்மங்கலம் காப்புக் காட்டையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிய பின்னர் அனுமதி அளிப்பது குறித்து வனத்துறை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெரு மாநகராட்சியாக மாறிய சென்னையில், மீதமுள்ள ஒரே இயற்கை வளத்தை, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு⚖ பின்னர், அரசு சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages