முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி - Agnipuratchi

முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

Share This

முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், மதுரை அலங்காநல்லூர் பகுதி விவசாயிகள் முதல்கட்ட சாகுபடி பணிகளை முடித்து, தற்போது இரண்டாம் கட்டமாக நிலங்களை உழுது நாற்றாங்காள் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு இப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. இதனால் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகின. இந்தாண்டு பருவமழை கணிசமாக பொழிந்ததால் வைகை மற்றும் பெரியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விளை நிலங்களை உழுது, தண்ணீரை தேக்கி, நாற்றாங்கால் நட்டனர். இம்முறையாவது நெல்லுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages