அண்ணன் மாவீரன் அவர்களுடன் 25 ஆண்டுகாலம் எல்லா கஷ்ட,நஷ்டங்களிலும் பயணித்தவன் என்கின்ற முறையிலும்,
அப்பல்லோ மருத்துவமனையில் மாவீரன் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் ஊன் உறக்கமின்றி உடனிருந்தவன் என்ற முறையிலும்
அவரின் குடும்பத்தார் தொடர்ந்து மாவீரன் அவர்களின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் படி செயல்படுவது மன வேதனை அளிக்கிறது.
---------------------------
மிகுந்த மனவேதனையுடன் இப்பதிவு.
---------------------------
தம்பி கனலரசனை வைத்து பிழைப்பு நடத்த துடிக்கும் உறவினர்கள்!
இந்த உண்மை நிலை யாருக்காவது தெரியுமா ?
--------------------------
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் அண்ணன் மாவீரன் அவர்கள் உயிருடன் இருந்தபோது ஒரு சிலர் சந்தேகம் எழுப்பிய சமயத்தில் “மரணம் என்ற ஒன்று தான் என்னை அய்யாவிடம் இருந்து பிரிக்குமே தவிர வேறு யாராலும் பிரிக்க முடியாது“ என்று கூறினார்.
மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகன் கனலிடத்திலும் மருத்துவமனையில் யாரையும் அனுகவிடாமல் பார்த்துக் கொண்டிருந்த தன் தங்கையிடத்திலும் “அய்யா சொல்படி – கேட்டு நடந்துகொள்ளுங்கள் “ என்று கூறிவிட்டுத்தான் இறந்தார்.
இந்நிலையில் மாவீரன் அவர்களின் தங்கையின் கணவர் பழஞ்சநல்லூர் அன்பழகன் அவரது மகன் மனோஜ் ஆகிய இருவரும் “மாவீரன் குரு வன்னியர் அறக்கட்டளை மற்றும் நலச்சங்கம்” என்று ஒன்றை புதிதாக ஆரம்பித்து பதிவு செய்து காடுவெட்டியில் பெயர்ப் பலகை வைத்து நிதி வசூல் செய்து வருவது தெரிந்த பின் அவ்வூர் பெரியவர்கள் அதைத் தடுத்துவிட்டனர்.
அண்ணன் அவர்கள் உயிருடன் இருந்த போது தன் மகளையும்,மகனையும் அவர்களிடம் தங்க வைத்து படிக்க வைத்ததால் அதற்கான பணத்தை கணக்கில்லாமல் கொடுத்துவந்துள்ளார்.
அந்த ருசி அறிந்தவர்கள் பணம் இல்லை என்பதால் தவறான வழியில் பணம் திரட்ட ஆரம்பித்துள்ளனர்.இது போதாதென்று வெளிநாடுகளில் உள்ள இன உணர்வாளர்களிடம் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் கடனை வைத்து விட்டு மாவீரன் இறந்துவிட்டார், குடும்பத்தைப் பார்க்காமல் கட்சிக்கு உழைத்தார் என்று சொல்லி நிதிதிரட்ட முன்வந்துள்ளனர்.
இந்த நேரத்தில் "கம்போடியாவில் நடைபெறவுள்ள அகில பாரதசத்திரியர் மாநாட்டில்" பல லட்சம் நிதி திரட்டித் தருவதாக பல காக்கை வன்னியர்கள் ஆசை காட்டியதால் தன் பிளஸ் டூ படிப்பைப் பொருட்படுத்தாமல் கம்போடியா, சிங்கப்பூர், துபாய் என்று செல்ல அன்பழகனும் மனோஜும் திட்டமிட்டு கனலின் மனதைக் கெடுத்து படிக்கவிடாமல் பாஸ்ப்போர்ட் எடுக்க வேலை செய்தனர். கனல் மைனர் என்பதால் தாயின் அனுமதியுடன் தாயைக் கார்டியனாக்கிதான் பாஸ்ப்போர்ட் எடுக்க முடியும்.
அதனால் கனலின் தாயார் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று நடக்கமுடியாமல் உள்ள நிலையில் கையெழுத்து வாங்கக் கனலும், மனோஜும், அன்பழகனும் சென்னையில் தன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த அண்ணி திருமதி.லதாகுருநாதன் அவர்களிடம் சென்று கையெழுத்து கேட்டுள்ளனர்.
அப்போது அவர் படிக்கின்ற வேலையில் இப்பொழுது வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்பா, உன்னை பெரிய டாக்டாரப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் நீ கேட்பார் பேச்சைக் கேட்கிறாய். முதலில் பிளஸ் டூ வில் நல்லமார்க் எடுத்து பாஸ் செய்துவிட்டு பின்னர் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று கூறியுள்ளார். அதற்கு கனல் தன் அம்மாவை போடி வாடி என்று வாய்க்கு வந்த படியெல்லாம் திட்டி கழுத்தில் கைவைத்து கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் அங்கே விஷயம் தெரிந்து சென்னை மாவட்ட மூத்த கட்சியினர் சென்றதும் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற ரவுடிகளை போகச் சொல்லிவிட்ட கனல், அம்மாவைப் பார்க்க வந்ததாகவும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் பின்னர் உள்ளே சென்ற கனல் தன் தாயைக் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு துன்புறித்தியுள்ளார். இதனைப் பார்த்த கட்சி இளைஞர் ஒருவர் மனம் பதறி வெளியில் வந்து கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார்.
கனல் தற்பொழுது அன்பழகன் கட்டுப்பாட்டில் மனம் மாறி அப்பா வளர்த்த சங்கத்திற்கு எதிராக செயல்படுகிறார். இந்த அன்பழகனின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமம். இந்த அன்பழகனை அண்ணன் மாவீரன் அவர்கள் உயிரோட இருந்தபோது அவரது நடவடிக்கைகளாலும், செயல்பாட்டாலும் ஒதுக்கி வைத்திருந்தார்.
ஆனால் இந்த அன்பழகன், மாவீரன் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் மூக்கில் ட்யூப் வைத்துக்கொண்டு சென்னை வீட்டில் இருந்தபோது தொடர்ந்து அவருக்கு கோபம் வரும்படி நடந்து வந்துள்ளார்.
இப்படியே தொடர ஒரு நாள் வாக்குவாதம் முற்றிவிட மாவீரன் அவர்கள் தன் மூக்கில் இருந்த ட்யூப்களை இழுத்துப் போட்டு விட்டு கோபத்துடன் எழுந்துள்ளார். அதனால் தான் சரியாகிவந்த அவரது நுரையிரல் செயல் இழந்து மரணப் படுக்கைக்குச் சென்றார் என்பது தான் யாருக்கும் தெரியாத வெளிவராத உண்மை.
அண்ணன் மாவீரன் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 நாட்களில் ஒரு நாள் கூட இந்த அன்பழகன் மருத்துவமனை வந்து பார்க்கவில்லை.
அண்ணன் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது பல லட்சங்களை பலரிடம் வசூல் செய்து எடுத்துக் கொண்டனர். செலவு முழுவதையும் அய்யா தான் பார்த்துக் கொண்டார்.
இப்படிப்பட்ட அன்பழகன் இப்பொழுது அண்ணன் மாவீரன் அவர்களின் பெண்ணைத் தன் இரண்டாவது மகன் மனோஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். அதேபோல் கனலின் படிப்பைக் கெடுத்து தவறான வழியில் அழைத்துச்சென்று தனியாக அறக்கட்டளை நலச்சங்கம் என்று சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபட எண்ணியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ளவர்களிடம் குடும்பம் கடனில் உள்ளது என்று சொல்லி பல லட்சங்களைத் திரட்டும் திட்டத்துடன் கனலரசனை வெளிநாடு அழைத்துச் சென்று வர திட்டமிடுகின்றார். இதற்கு சம்மதிக்காத தாயை மகனை விட்டே வாய்க்கு வந்தபடி வாடி போடி என்று திட்டவைத்து காலால் எட்டி உதைக்கச்செய்தும் செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி கழுத்தை நெறித்துக் கொன்று விடுவதாகப் பாய்ந்து கனல் தன் தாயாரிடம் சண்டையிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் மாவீரன் அவர்களின் தங்கையின் கணவர் அன்பழகனும் ,அன்பழகன் மகன் மனோஜ் ஆகிய இருவரும் என்று தெரிகிறது.
மாவீரன் அவர்கள் உயிரோடு இருந்தபோது இவர்களை சங்கம் மற்றும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கவே இல்லை.
அய்யா சொல்லே மந்திரம் வேதவாக்கு என்று வாழ்ந்தவரின் மகனான கனல் , மருத்துவர்அய்யா அவர்கள் மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் சொல் கேளாமல் அன்பழகன் குடும்பத்தால் ஆட்டிi வைக்கப்படுகின்றான் என்று தெரிகிறது.
கணவரை இழந்து கால் முறிந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு நடக்க முடியாமல் ஆறு மாதங்களாக வேதனையில் வாடும் அண்ணி திருமதி.லதாகுருநாதன் அவர்களின் வாழ்க்கையே இப்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது.
தன் சொந்த மகனே அவருக்கு எதிராக மாறியுள்ளது அனைவருக்கும் மிகுந்த வேதனைக்குரியதாகியுள்ளது.
இனிமேல் மருத்துவர் அய்யா அவர்களும்,மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் எதை சொன்னாலும் குடும்பத்தார்கள் கட்டுபடுவார்கள் என்பது சந்தேகமே.
மாவீரன் அவர்களின் படத் திறப்பு அன்று அய்யா சொன்ன மூன்றில் இரண்டை நிறைவேற்றியுள்ளார்.
ஒன்று-சட்டக்கல்லூரி வளாகத்திற்கு அண்ணன் மாவீரன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது,
இரண்டு - அண்ணன் அவர்களின் கம்பீர முழு உருவச்சிலை வன்னியர் கல்வி அறக்கட்டளையில் வைக்கப் பட்டுள்ளது,
மூன்றாவது பணியாக மணிமண்டபம் கட்ட அனைத்தும் திட்டமிட்ட நிலையில் அதற்கு ஒத்துழைக்காமல் மாவீரன் அவர்களின் தங்கைகளும், அன்பழகன், மனோஜ் போன்றோர்கள் இன்றுவரை தடை செய்து வருவதை கேள்விப் படும்போது மனம் மிகவும் வேதனையாக உள்ளது.
இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவை காலம் விரைவில் தரும்.,
நன்றி..
No comments:
Post a Comment