அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்-சென்னை பொறியியல் கல்லூரிகளுக்கே முதலிடம் - Agnipuratchi

அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்-சென்னை பொறியியல் கல்லூரிகளுக்கே முதலிடம்

Share This

தமிழகத்தில் சிறந்த பொறியியல் படிப்பினை வழங்கும் கல்லூரிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் பத்து இடங்களை சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்களை பெற்று 146 ரேங்குகளை கைப்பற்றிய தாம்பரம், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல் இடத்தில் உள்ளது. இந்த கல்லூரி மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்கல் உள்ளிட்ட நான்கு பாடப்பிரிவுகளில் தங்க பதக்கங்களை பெற்றுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து 5வது முறையாக இந்த கல்லூரி தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய சாய் ராம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சாய் பிரகாஷ் லியோ முத்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கிடையே நிலவும் புரிதல் தான் தங்களது கல்லூரியின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages