புதிய தலைமை தேர்தல் ஆணையர்-சுனில் அரோரா நியமனம் - Agnipuratchi

புதிய தலைமை தேர்தல் ஆணையர்-சுனில் அரோரா நியமனம்

Share This

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு பெற்றதையடுத்து, தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages