ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.900 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு, சிகிச்சைக்காக தற்போது ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்ட்யூட் ஆப் மெடிக்கல் சையின்சஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை மோசமடைந்ததால் சுயமாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் லாலு இருப்பதாகவும், தேவை ஏற்படும் பட்சத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் எனவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment